ஒரு மரத்தின் இறப்பு!
என்னை மிகவும் பாதித்த 'Death of a Tree' என்ற ஒரு ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு இது!
அந்த மின்ரம்பத்தின் பேரிரைச்சல்
மெல்ல மெல்ல அடங்கி ஓய்ந்தது!
அவள் முன்னோக்கிச் சாய்ந்தாள், வீழ்ந்தாள்!
ஒரு சோகமிக்க திடீர் தாக்கம்,
அப்பசுமைத் தாயின் ஊனத்திலும்
அவள் நீட்டல்களின் இறுதி மடங்கலிலும்,
மிச்சமிருந்த அவளை மெல்லத் தீண்டினேன்!
ஒரு நூறு ஆண்டுகளுக்கான நளினப் பேரழகு அழிந்தது!
அவளது இலைகளின் வெளிர் நிறமானது
அக்காலை நேரத் தூறலில் ஒன்றறக் கலந்தது!
அந்த வனராணியை வீழ்த்திய பெருமை ஒரு
பெருங்காற்றுக்கோ புயலுக்கோ சேர்ந்திருக்கலாம்!
அவளுக்கு அது ஒரு சரியான யுத்தம் விளைத்த
கௌரவ இறப்பாகவும், இந்த அவமானமிக்க
சர்வ நிச்சயத்தினும் ஏற்றதாகவும் அமைந்திருக்கலாம்!
எதனால்? இவ்வீழ்ச்சி மானுடன் கையால் விளைந்தது,
மனிதன் என்றாலே துன்பமும் வலியுமே!
நான் அவ்விடத்தை விட்டு வேதனையோடு
ஒரு இழப்பை நன்குணர்ந்து அகன்று சென்றேன்!
இதுவும் வாழ்க்கை விளையாட்டில் ஒரு அங்கம் தானோ?
4 மறுமொழிகள்:
Very good poem..
You asked me to see the 'Kalaignar-Arikkai stmt', Iam not able to find it here. Where is it?!
Thanks, JSri!
அருண்,
நான் எழுதியிருப்பது, கலைஞரின் அறிக்கை பற்றி அல்ல! சொல்ல வந்தது, ஜெயேந்திரர் கைது பற்றி நானும் என் கருத்துக்களை என் பதிவிலிட்டிருப்பதாக ('ஜெயேந்திரர் கைது - சில எண்ணங்கள்' படிக்கவும்).
சற்று பின்னோக்கிச் சென்று (சமயம் இருப்பின்!) என் "உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!", "கமல்ஹாசனின் சிங்கப்பூர் பேச்சு குறித்த ஓர் அலசல்" மற்றும் "சிறு வயது சிந்தனைகள்" (பல பகுதிகள்)
ஆகியவற்றையும் படிக்கலாம். கருத்துக்களையும் கூறலாம் :-))
என்றென்றும் அன்புடன்
பாலா
Good poem, a tamil story written by Anuradha Ramanan flashes in my mind. the story goes like this, Unable to bear the proposed cutting of a tree, she prevents it by spreading false propaganda, that a deity haunts the tree and saves it from cutting !!!
-Nithya
//நல்லா இருக்கு இந்தக் கவிதை.
//
ரிப்பீட்டு ...
Post a Comment